செய்திகள் :

ஆட்டத்தின்போது தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு!

post image

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் தற்போது உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று டாக்கா பிரீமியர் டிவிஷன் லீக் போட்டி தொடரின் ஆட்டத்தில் பங்கேற்றார். அப்போது பீல்டிங் செய்துகொண்டிருந்த தமிமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வர்ணனையில் இனவெறி கருத்து! சிக்கலில் ஹர்பஜன் சிங்!

பரிசோதனை செய்ததில் தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானதும், உடனடியாக டாக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் ஏற்பட செய்யப்பட்டது.

ஆனால், தமிமின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பயணம் செய்ய முடியாது எனத் தெரிவித்த மருத்துவர்கள் மைதானத்திற்கு அருகே உள்ள மருத்துமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடைசி டி20: 10 ஓவர்களில் வென்ற நியூசிலாந்து..! பாகிஸ்தான் படுதோல்வி!

பாகிஸ்தானுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதில் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள... மேலும் பார்க்க

வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலம் நீட்டிப்பு!

வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.61 வயதான பில் சிம்மன்ஸ் 2024 ஆம் ஆண்டு தொ... மேலும் பார்க்க

இங்கிலாந்து அணியின் கேப்டனாக விரும்புகிறாரா பென் டக்கெட்?

இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவது குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் பேசியுள்ளார்.இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஒருநாள் தொடர்: வில்லியம்சன், ரச்சின் உள்பட 5 பேருக்கு அணியில் இடமில்லை!

பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்தரா பெயர்கள் இடம்பெறவில்லை. நியூசிலாந்து அணியின் வழக்கமான கேப்டன் மிட்செல் சாண்டனர், ஐ... மேலும் பார்க்க

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரம்! புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பு!

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எலைட் நடுவர்கள் விவரத்தை அற... மேலும் பார்க்க

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ ஒப்பந்தம்: யாரெல்லாம் இடம்பிடித்துள்ளனர்?

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. அதில் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோர் கிரேட்-ஏ ப... மேலும் பார்க்க