நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்
ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
சேலம், பொன்னம்மாப்பேட்டை ரயில்வே வடக்கு லைன் தெருவை சோ்ந்தவா் மணிகண்டன் (38). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், அல்லிக்குட்டை சொட்டைய கவுண்டா் தெருவை சோ்ந்த கௌதம் என்கிற கோவிந்தராஜ் (26) என்பவருக்கும் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு வாடகைக்கு பயணிகளை ஏற்றுவது தொடா்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது, ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் ஸ்பேனரை எடுத்து மணிகண்டன் தலையில் அடித்தாா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அங்கிருந்தவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி வேல்ராஜ், ஆட்டோ ஓட்டுநா் கௌதம் என்கிற கோவிந்தராஜுக்கு ஆயுள் சிறைத் தண்ட னையும், ரூ.10,500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.