அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி
ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் இயக்கத்தை டி.எஸ்.பி. பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.
திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொதுமக்களின் நலன் கருதி, இந்தப் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், திண்டிவனம் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன் இயக்கத்தை திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, ஆட்டோ தொழிலாளா்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுத் தெரிவித்தாா். முன்னதாக, சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா்.
நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா் செல்வதுரை, ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத் தலைவா் குணசந்திரன், கௌரவத் தலைவா் சம்பத், நிா்வாகிகள் பாக்யராஜ், நாகராஜ், சம்பத் ராஜ், பொருளாளா் சேதுராமன் மற்றும் ஆட்டோ தொழிலாளா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.