செய்திகள் :

ஆதிச்சநல்லூர்: ``எலும்புக்கூடு நெற்றியில் ஓட்டை இருக்க இதுதான் காரணம்'' -முத்தாலங்குறிச்சி காமராசு

post image

பொருநைப் பூக்கள், பொதிகை மலை அற்புதங்கள், தாமிரபரணி கரை சித்தர்கள், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் என்று பல்வேறு ஆய்வு நூல்களை எழுதிய திருநெல்வேலியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த்துறை நடத்திய தமிழ் மன்றத்தில் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தபோது, 'தமிழர் வரலாற்றில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள்' என்ற தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றினார்.

ஆதிச்சநல்லூர்

அப்போது மேடையில் அவர் கூறியதாவது, "2004-ல் தி.சத்தியமூர்த்தி ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்தபோது நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழி கிடைத்தது.

அக்காலத்தில் தாழிகளுக்குள் முழு மனிதனை அப்படியே வைத்தார்கள், அவ்வாறன்றி எலும்புக்கூடுகளை மட்டும் தாழிகளுக்குள் வைக்கும் வழக்கமும் இருந்தது. சிவகளையிலும் மூன்று கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டது. அங்குள்ள இரும்புப் பொருட்களை பீட்டா லேபில் (beta lab) பகுப்பாய்வு செய்யும்போது அப்பொருள்கள் எல்லாம் 5500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. மேலும் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைய முக்கிய காரணம் நம் ஆட்சி தலைவரும், ஆதிச்சநல்லூர் மக்களும் தான்.

நிறைய பழமையான இடங்கள் காலப்போக்கில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாகச் சொன்னால் திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு கொட்டிக்கிடக்கிறது. திருநெல்வேலி அருங்காட்சியகத்திற்கு அருகே பாளையங்கோட்டையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஒரு நீர்த்தொட்டி உள்ளது.

பிரம்மாண்ட வடிவமைப்புடன் உள்ள அதன் கல்வெட்டில் காமராசர் அந்த நீர்த் தொட்டியைத் திறந்து வைத்ததற்கான செய்திகள் இடம்பெறுகிறது. இதனைப் போன்று சரோஜினி பூங்காவிலும் கவர்னர் பெயரால் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பாளையங்கோட்டை பேருந்து நிலையம் பற்றிய தகவல்கள் ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டிலும் மகாராஜா மற்றும் காமராசர் அவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது" என்றார்.

மேலும் முத்தாலங்குறிச்சி காமராசு மாணவர்களிடம், "நீங்களே இன்று கதை எழுதலாம், ஒரு குழு அமைத்து அதைப் பகிரலாம். எங்கள் காலத்திலெல்லாம் எதையும் பத்திரிக்கைகளில் எழுதினால் ஐம்பதுகளில் ஒன்று மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வெளியாகும். அதில் கிடைக்கின்ற ஐந்து ரூபாயில் அத்தனை மகிழ்ச்சி கொண்டோம். இன்றோ எல்லோரும் படிக்கின்றனர்.

அக்காலத்தில் நீர்நிலைகளுக்கெல்லாம் காவல் வைக்கப்பட்டிருந்தது. இன்றோ நம் வீட்டில் இருந்து வெளிவரும் சாக்கடை நீர் நதியோடு கலக்கிறது. இதனால் நீர்நிலைகள் மாசடைகிறது. பொதுவாக நான் மாணவர்களிடம் அதிகமாகப் பேசக் காரணம் இது போன்ற செய்திகளை நீங்களே கடத்திச் செல்கிறீர்கள்." என்று கூறினார்.

இடையில் சபிகா என்கிற மாணவி ஆதிச்சநல்லூர் எலும்புக்கூடுகளில் இருக்கும் நெற்றிக்கண் பற்றிய கேள்வி கேட்க, "அன்றைய காலத்தில் முத்துக்குளித்தல், சங்குக் குளித்தல், கடல் வழிப்பயணம் போன்றவற்றைச் செய்தனர். ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை அவர்கள் கடலுக்குள்ளேயே இருப்பதால் காதடைப்பு ஏற்படும். இவ்வாறு கடலுக்குள் சென்று முத்துக் குளிப்பவர்களுக்கு ஒரு நோய் ஏற்படும். அதுவே ஆதிச்சநல்லூரில் கிடைக்கப்பெற்ற எலும்புக்கூடுகளின் நெற்றியில் உள்ள ஓட்டை உண்டாகக் காரணம்" என்றார்.

ஆதிச்சநல்லூர்: 'நம்ம நாகரிகத்தை நாமே பேசலன்னா... யாரு பேசுவா?'- கவனம் ஈர்க்கும் ஆன் சைட் மியூசியம்

ஆசிய கண்டத்தில் சைனாவிற்கு பிறகு இந்தியாவில் முதன்முதலில் ஆன் சைட் மியூசியமா..? ஆன் சைட் மியூசியம் என்றால் என்ன? தமிழில் தள அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் ஆன் சைட் மியூசியம் என்பது ஒரு வரலாற்று அ... மேலும் பார்க்க

மதுரை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமண மலை; சீரழியும் சிலப்பதிகாரத் தலம்; பாதுகாக்குமா தமிழக அரசு?

தமிழர்களின் தொன்மையான நாகரிக வரலாற்றைச் சொல்லும் கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்களையும், மதுரை மாவட்டத்தில் சங்க கால சின்னங்களையும், சமணத் தடங்களையும் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.கொங்கர் புளியங்குளம்... மேலும் பார்க்க

ஜாலியன் வாலாபாக் படுகொலை; பழிதீர்ப்பும்; வீர மரணமும் - சர்தார் உதம் சிங் நினைவு தின கட்டுரை!

இந்திய வரலாற்றிலேயே பிரிட்டிஷாரால் நிகழ்த்தப்பட்ட மிகக்கொடியசம்பவமாக இன்றளவும் பார்க்கப்படுவது ஜாலியன் வாலாபாக் படுகொலை. இதில்கொல்லப்பட்டதன் நாட்டு மக்களுக்குநீதியைபெற்று தர, அந்த படுகொலைக்கு காரணமான ... மேலும் பார்க்க

`கங்கை முதல் கடாரம் வரை' - புலிக்கொடியை பார் எங்கும் பறக்கச் செய்த பேரரசன் ராஜேந்திர சோழன்

நம் இந்திய வரலாற்றில் அதுவரை எந்த அரசனும் செய்திராத செயலாகக் கடல் கடந்து சென்று பல தேசங்களை வெற்றி கொண்டு, தன் வாழ்நாள் முழுவதும் தோல்வி என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் வெற்றியை மட்டுமே வாகை சூடிய ஓர் ப... மேலும் பார்க்க

ஆட்டுக்கறி ரூ.40, மைக்கிள்ஸ் ஐஸ்கிரீம் ! - 70களில் திருச்சி | கிறிஸ்துமஸ் இரவுகள் 3 | #Trichy

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்' - பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கம்

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் "திராவிட வரலாற்றுத் தடத்தில் தொல்லியல் ஆய்வுகள்" பற்றிய சிறப்பு ஆய்வரங்கம், பல்கலைக்கழகத்தின் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தில் நடைபெற்றது. இதில், "தொல்லியல் வரலாற... மேலும் பார்க்க