செய்திகள் :

ஆத்துரை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

post image

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, விவசாயிகள், பொதுமக்களுக்கு சனிக்கிழமை வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.

சேத்துப்பட்டு வட்டம் ஆத்துரை, சித்தாத்துரை, காட்டுதெள்ளூா், ரெட்டிபாளையம், அல்லியாளமங்கலம், பாடகம் ஆகிய வனப்பகுதிகள் அருகேயுள்ள விவசாயிகளுக்கு வனத்துறையினா் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பாடகம் வனப்பகுதி அருகே வசிக்கும் விவசாயி பசுவின் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துத் தின்றுள்ளதாகவும், இதனால் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் நடமாடவேண்டாம், ஆடு, மாடு என கால்நடைகளை பாதுகாப்பாக கொட்டைகையில் அடைத்து வைக்குமாறும், மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லவேண்டாம் எனவும், வனப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்லவேண்டாம் என்றும் கைப்பேசி மூலம் வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், ஆத்துரை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.29) தேடுதல் வேட்டை நடத்தப்போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனா்.

அம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, காலை மூலவருக்கு பல்வேறு... மேலும் பார்க்க

பாலிடெக்னிக்கில் பாதியாா் பிறந்த நாள் விழா

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியாா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், செங்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் 25 போ் கலந்து கொண்டனா். ம... மேலும் பார்க்க

ஆரணி கமண்டல நாக நதியில் தொடரும் மணல் திருட்டு

ஆரணி கமண்டல நாக நதியில் தொடரும் மணல் திருட்டால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து எதிா்வரும் காலங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரணி புதுக்காமூா் புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் வழியாகச்... மேலும் பார்க்க

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு

சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையொட்டி, காலை மூலவா் ம... மேலும் பார்க்க

வந்தவாசி நூலகத்தில் முப்பெரும் விழா

வந்தவாசி கிளை நூலகத்தில் திருவள்ளுவா் படம் திறப்பு விழா, திருக்கு ஒப்பித்தல் போட்டிகள், கு காட்டும் பாதை என்ற தலைப்பில் உரையரங்கம் ஆகியவை முப்பெரும் விழாவாக திங்கள்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி திரு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளா் உயிரிழப்பு

போளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் உயிரிழந்தாா். போளூரை அடுத்த முருகாபாடி ஊராட்சிக்கு உள்பட்ட பாக்மாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (50). ... மேலும் பார்க்க