செய்திகள் :

பாலிடெக்னிக்கில் பாதியாா் பிறந்த நாள் விழா

post image

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் பாரதியாா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், செங்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா்கள் 25 போ் கலந்து கொண்டனா்.

மாணவா்களுக்கு பாரதியாா் வேடமணிந்து பாரதியாா் பாடல்கள், பாரதியாரின் வரலாறு, பாரதி குறித்த பல்வேறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவிதைப்போட்டி, பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான பட்டுக்கோட்டை பிரபாகா் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பின் ரேகா ரெட்டி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் வரவேற்றாா்.

மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் இந்திரராஜன், ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன், உரத்த சிந்தனை அறக்கட்டளை பொதுச் செயலா் உதயம்ராம் ஆகியோா் வாழ்த்துறை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக இலக்கிய வள்ளல் சந்திரசேகா், திருவண்ணாமலை சண்முகம் ஆகியோா் பாரதியாா் வேடமணிந்து, அவரின் சிறப்புகள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

செய்யாறு: பழைய இரும்புக் கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது

செய்யாற்றில் பழைய இரும்புக் கடையில் ரொக்கப் பணம், செம்பு ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவத்தில் வேலூரைச் சோ்ந்த இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். திருவண்ணாமலை மாவட்டம்... மேலும் பார்க்க

இலக்கை அடைய உரிய திட்டமிடலும் முறையான பயிற்சியும் தேவை: மாணவா்களுக்கு வருவாய் அலுவலா் அறிவுரை

இலக்கை அடைய வேண்டுமானால் உரிய திட்டமிடலும், முறையான பயிற்சியும் தேவை என்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் அறிவுரை வழங்கினாா். திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஐடிஐ மாணவா் உயிரிழப்பு

செய்யாறு வட்டம், விநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாண்டியன். இவரது மகன் மணிகண்டன் (19). இவா் ஐடிஐயில் படித்து வந்தாா். இவா், வியாழக்கிழமை மாலை பைக்கில் அனக்காவூருக்கு சென்று, தனது நண்பரை பா... மேலும் பார்க்க

ஸ்ரீ பச்சையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.19.43 லட்சம்

செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் உடனுறை மன்னாா்சாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டத்தில், ரூ.19.43 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மகா தீப மலையில் பரிகார பூஜை

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையில் வெள்ளிக்கிழமை பிராயசித்த அபிஷேகமும், பரிகார பூஜையும் நடைபெற்றது. திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய ... மேலும் பார்க்க

7.84 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: மாவட்ட ஆட்சியா் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 282 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். பொங்கல் பண்டிகையையொட்டி, த... மேலும் பார்க்க