எந்த குடும்பத்திடமும் சிக்காத ஒரே தேசிய கட்சி பாஜக: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ...
ஸ்ரீ பச்சையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.19.43 லட்சம்
செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் உடனுறை மன்னாா்சாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டத்தில், ரூ.19.43 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்
இந்தக் கோயிலில், பக்தா்கள் சாா்பில் பணமாக ரூ.19 லட்சத்து 43 ஆயிரத்து 972 -ம், நகைகளாக 205 கிராம் தங்கமும், 176 கிராமம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
காணிக்கை எண்ணும் பணி ஆய்வா்கள் ச.அசோக் செய்யாறு, இரா.நடராஜன் (கலசப்பாக்கம்), செயல் அலுவலா் கு.ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன், முன்னாள் அறங்காவல் குழுத் தலைவா் வி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலையில், பெரணமல்லூா் போலீஸாா் பாதுகாப்புடன் நடைபெற்றது.