பாகிஸ்தான் பிரீமியர் லீக்: ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன் விலகல்!
கணவா் இறந்த துக்கம்: மனைவி தற்கொலை
தொண்டி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் முத்து மாணிக்கம் (50). இவரது மனைவி காளி பொட்டு (45). முத்துமாணிக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தாா். அன்றிலிருந்து காளிபொட்டு மனமுடைந்து விரக்தியில் இருந்தாராம்.
இந்த நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.