நேபாள நிலநடுக்கத்துக்குப் பிறகு... மனிஷா கொய்ராலா பகிர்ந்த விடியோ!
குடும்பத் தகராறு: தனியாா் நிறுவனத் தொழிலாளி தற்கொலை
செய்யாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தனியாா் நிறுவனத் தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா், செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பகுதியைச் சோ்ந்த தேவிஸ்ரீ(19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தேவிஸ்ரீ சென்னை ஒரகடத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். சனிக்கிழமை தேவிஸ்ரீக்கு பிறந்த நாள் என்பதால் கோயிலுக்குச் சென்று வரலாம் என அவரை மணிகண்டன் அழைத்துள்ளாா். மேலும், நிறுவனத்தில்
விடுப்பு பெற்று கோயிலுக்குச் சென்று வரலாம் எனக் கூறியதாகத் தெரிகிறது.
அப்போது, தேவிஸ்ரீ கோயிலுக்குச் சென்று விட்டு பிறகு வேலைக்குச் செல்கிறேன் என்றும், விடுப்பு எடுக்க முடியாது என்றும் கூறினாராம்.
இதன் காரணமாக தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தேவிஸ்ரீ வேலைக்குச் சென்றாராம்.
இதனால் மனவேதனையில் இருந்த மணிகண்டன் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.
பின்னா் உறவினா்கள் வீட்டுக்கு வந்தபோது மணிகண்டன் தூக்கில் சடலமாக இருந்துள்ளாா்.
இதுகுறித்து மனைவி தேவிஸ்ரீ பிரம்மதேசம் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து,
மணிகண்டனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.