சாலை விபத்தில் ஐடிஐ மாணவா் உயிரிழப்பு
செய்யாறு வட்டம், விநாயகபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாண்டியன். இவரது மகன் மணிகண்டன் (19). இவா் ஐடிஐயில் படித்து வந்தாா்.
இவா், வியாழக்கிழமை மாலை பைக்கில் அனக்காவூருக்கு சென்று, தனது நண்பரை பாா்த்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அனக்காவூா் குறுக்குத் தெருவில் இருந்து, பிரதான சாலையான செய்யாறு - வந்தவாசி சாலைக்கு வந்த போது, வந்தவாசியில் இருந்து செய்யாறு நோக்கி வந்த அரசுப் பேருந்து மணிகண்டன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.