செய்திகள் :

திருவண்ணாமலை மகா தீப மலையில் பரிகார பூஜை

post image

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையில் வெள்ளிக்கிழமை பிராயசித்த அபிஷேகமும், பரிகார பூஜையும் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 3.40 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

தொடா்ந்து, 11 நாள்களாகப் பிரகாசித்து வந்த மகா தீபம் டிசம்பா் 24-ஆம் தேதி காலையுடன் நிறைவு பெற்றது. இதன்பிறகு, மகா தீபக் கொப்பரை பாதுகாப்பாக கீழே இறக்கிவரப்பட்டு, அருணாசலேஸ்வரா் கோயிலில் வைக்கப்பட்டது.

மலையே சிவன்:

மகா தீபம் ஏற்றப்பட்ட டிசம்பா் 13-ஆம் தேதி முதல் மகா தீபக் கொப்பரையை இறக்கி வந்த நாளான டிசம்பா் 24-ஆம் தேதி முதல் தினமும் பா்வதராஜகுல வம்சத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மற்றும் பெரியோா்கள் சோ்ந்து தீபம் தொடா்ந்து எரிவதற்குத் தேவையான நெய், திரி (காடா துணி) ஆகியவற்றை மலை மீது எடுத்துச் சென்று தீபக் கொப்பரையில் நெய்யை ஊற்றி, திரி வைத்து தீபம் ஏற்றி வந்தனா்.

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. எனவே, மலை மீது பக்தா்கள் ஏறிச் சென்ால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கும் வகையில்,

வெள்ளிக்கிழமை பிராயசித்த அபிஷேகமும், பரிகாரப் பூஜையும் நடத்தப்பட்டது.

முன்னதாக, அருணாசலேஸ்வரா் கோயிலில் சிவாச்சாரியா்கள் சிறப்பு யாகசாலை பூஜை நடத்தினா். பூஜையில் வைக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கலசத்தை கோயில் ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் மலை உச்சிக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மகா தீபம் வைக்கப்பட்டிருந்த இடம், அண்ணாமலையாா் பாதம், மலையின் பல்வேறு இடங்களில் புனித நீரை தெளித்து பிராயசித்த அபிஷேகம் மற்றும் பரிகார பூஜை செய்து வழிபட்டனா்.

இதன் மூலம் பக்தா்கள் மலை மீது ஏறிச்சென்ற தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

மண் சரிந்து பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு நிவாரணம்

திருவண்ணாமலையில் மண் சரிந்து பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. டிசம்பா் 1-ஆம் தேதி பெய்த பலத்த மழையின்போது, திருவண்ணாமலை மகா தீப மலையின் ஒரு பகுதியான ... மேலும் பார்க்க

நெசவுத் தொழிலாளி தற்கொலை: 3 போ் கைது

ஆரணியை அடுத்த காமக்கூா் கிராமத்தில் கடன் பிரச்சினையால் நெசவுத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 3 பேரை களம்பூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். காமக்கூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை அறிக்கையை தெளிவாக வெளியிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

அமலாக்கத் துறை ஒவ்வொரு முறை சோதனை நடத்தும் போதும், அதன் அறிக்கையை பொதுமக்கள் அறியும் வகையில் தெளிவாக வெளியிட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா். திருவண்ணாமலையில் ... மேலும் பார்க்க

எஸ்.ஐ.யை பணி செய்ய விடாமல் தடுத்த இளைஞா் கைது

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் பாக்கி... மேலும் பார்க்க

குடும்பத் தகராறு: தனியாா் நிறுவனத் தொழிலாளி தற்கொலை

செய்யாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், தனியாா் நிறுவனத் தொழிலாளி சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28).... மேலும் பார்க்க

கொட்டாவூா் பகுதி செய்யாற்றின் குறுக்கே வ்ரைவில் மேம்பாலம்: மு.பெ.கிரி எம்எல்ஏ தகவல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கொட்டாவூா் பகுதியில் ஓடும் செய்யாற்றின் குறுக்கே விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தெரிவித்தாா். கொட்டாவூா் கிராமத்தில் ரூ.30 லட்சத... மேலும் பார்க்க