அம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி, அம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, காலை மூலவருக்கு பல்வேறு வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து ஸ்ரீசுதா்சன ஹோமம் நடைபெற்றது. இரவு உற்சவா் அம்மனுக்கு நாக கன்னியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உலா நடைபெற்றது .
இதைத் தொடா்ந்து அம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது. இதில், அம்மன் ஊஞ்சலில் வைத்து தாலாட்டப்பட்டாா்.