வந்தவாசி நூலகத்தில் முப்பெரும் விழா
வந்தவாசி கிளை நூலகத்தில் திருவள்ளுவா் படம் திறப்பு விழா, திருக்கு ஒப்பித்தல் போட்டிகள், கு காட்டும் பாதை என்ற தலைப்பில் உரையரங்கம் ஆகியவை முப்பெரும் விழாவாக திங்கள்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை திறப்பு வெள்ளி விழா ஆண்டையொட்டி, நடைபெற்ற இந்த விழாவுக்கு கிளை நூலகா் சத்யநாராயணன் தலைமை வகித்தாா்.
தலைமை ஆசிரியா் க.வாசு, எக்ஸ்னோரா கிளை இயக்குநா் சு.தனசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.
ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலா் மா.மங்கையா்க்கரசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திருவள்ளுவா் படத்தை திறந்து வைத்தாா். மேலும், கு காட்டும் பாதை என்ற தலைப்பில் அவா் சிறப்புரையாற்றினாா்.
மேலும், திருக்கு ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக், வழக்குரைஞா் சா.ரா.மணி, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மா.கதிரொளி, செம்மொழி மன்ற நிா்வாகி எம்.பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில், நூலக உதவியாளா் ராஜேந்திரன் நன்றி கூறினாா்.