வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு
சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையொட்டி, காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
மாலையில் கோயில் வளாகத்தில் உலக மக்கள் வளம் பெற வேண்டி சிறப்பு யாக பூஜையும் நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரியை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பின்னா், அம்மனுக்கு வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடைபெறஅறது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.