செய்திகள் :

ஆந்திராவில் Google AI Hub திட்டம்; "ஆனால் நம்ம முதல்வர் இந்தியைத் தடை செய்ய முயல்கிறார்" - அண்ணாமலை

post image

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

நேற்று, சுமார் ₹1.25 லட்சம் கோடி ($15 Billion) வரை முதலீடு கொண்ட இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.

இது இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்றும் இதன் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறியிருக்கிறார் சுந்தர் பிச்சை.

இது ஆந்திராவின் தொழில்நுட்ப வளர்ச்சின் முன்னேற்றத்திற்கும், வேலை வாய்ப்பிற்கும் பெரும் மைல் கல்லாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, "ஆந்திரா முதல்வர் தொழில்நுட்பத்தில் பெரும் மைல் கல்லாக $15 டாலர் முதலீடு கொண்ட கூகுள் 'AI hub data centre'யை விசாகப்பட்டினத்தில் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

ஆனால், இங்கு தமிழ்நாடு முதல்வர் நம் மாநிலத்தில் இந்தியைத் தடை செய்யும் மசோதாவை கொண்டு வர பார்க்கிறார். திமுகவின் மலிவான அரசியலும், தேவையற்ற விஷயங்களுக்கு முன்னுரிமை தருவதும்" என்று முதல்வர் ஸ்டாலினை விமர்சித்திருக்கிறார்கள்.

கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டமன்றத்தில் பட்டியலிட்ட அமைச்சர்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.அதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ... மேலும் பார்க்க

Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விளக்கமும்!

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும், அதன் மூலம் மிகப்பெரிய ... மேலும் பார்க்க

Gujarat: முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! - என்ன நடக்கிறது குஜராத் அரசில்?

குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 17-ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறவிருக்கிறது. 17 அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தி வந்த குஜராத் முதலவர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசில், புதிய முகங்களைச் சே... மேலும் பார்க்க

"தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது" - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த ... மேலும் பார்க்க

TVK : தள்ளிப்போகும் விஜய்யின் கரூர் விசிட்? - காரணம் என்ன?

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை தவெக தலைவர் விஜய் நாளை நேரில் சென்று பார்ப்பதாக இருந்தது. இந்நிலையில், இப்போது அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் கரூர் விசிட் தள்ளிப்போவ... மேலும் பார்க்க

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக... மேலும் பார்க்க