செய்திகள் :

ஆந்திரா: கடலுக்குச் சென்ற மீனவரை இழுத்துச் சென்ற 200 கிலோ கருப்பு மார்லின் மீன்; என்ன நடந்தது?

post image

ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம், மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஜூலை 3, 2025 அன்று, அனகாபள்ளி மாவட்டத்தின் புடிமடகா கிராமத்திலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது.

நடந்தது என்ன?

யெரய்யா, அவரது சகோதரர் கொரலய்யா மற்றும் மற்றொரு மீனவருடன், பாரம்பரிய மீன்பிடி படகில் அதிகாலை 2 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். காலை 9 மணியளவில், அவர்களது வலையில் சுமார் 200 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கருப்பு மார்லின் மீன் சிக்கியிருக்கிறது.

இந்த மீன், அதன்வேகம், வலிமை மற்றும் கூர்மையான வாள் போன்ற மூக்கு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. மீனவர்கள் வலையை வெட்டி விடுமாறு அறிவுறுத்திய போதிலும், யெரய்யா மீனை இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மீனின் திடீர் அசைவால், அவரது கால் வலையில் சிக்கியது. மற்ற மீனவர்கள் தடுக்க முயல்வதற்கு முன்பே, மீன் அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு எச்சரிக்கை

கருப்பு மார்லின் கடலில் மிகவும் ஆபத்தான மற்றும் வேகமான மீன்களில் ஒன்றாகும். இது மணிக்கு 110 கிமீ வேகத்தில் நீந்தக்கூடியது. இதன் எடை 900 கிலோ வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

கருப்பு மார்லின் மீன்கள், மீனவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்று கடல் உயிரியல் நிபுணர் டாக்டர் நலின் பிரசாத் எச்சரித்துள்ளார். இந்த மீன்கள் சிக்கியவுடன் வலையை வெட்டி விடுவது பாதுகாப்பானது என்று அவர் கூறுகிறார்.

இந்த மீன்கள் மீனவர்களுக்கு பொருளாதார ரீதியாக மதிப்புமிக்கவை, இதன் இறைச்சி ஒரு கிலோவுக்கு 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், இந்த மீன்களில் பாதரசம் (mercury) அதிக அளவில் இருப்பதால், அடிக்கடி உண்பது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அனகாபள்ளி மாவட்ட மீன்வளத் துறை அதிகாரி ஜி. விஜயா கூறுகையில், ”இத்தகைய சம்பவங்கள் அரிதாக இருந்தாலும், மார்லின் போன்ற வலிமையான மீன்கள் மீனவர்களை இழுக்கக்கூடியவை” என்று கூறியிருக்கிறார். மீனவர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு காவல்துறை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து யெரய்யாவை தேடி வந்தநிலையில் தற்போது அவருக்கான சடங்கை செய்ய வீட்டில் உள்ளவர்கள் கூடியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அனகாபள்ளி கடற்கரையில் மோல்லி ஜோகன்னா என்ற மீனவர், கருப்பு மார்லின் மீனால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

ஒலிபெருக்கி இல்லாத மும்பை: மசூதி, வழிபாட்டுத்தலங்களில் இருந்த 1,600 ஒலிபெருக்கிகள் அகற்றம்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வரு... மேலும் பார்க்க

Skincase: மனித தோல் வடிவில் போன் கவர் உருவாக்கிய விஞ்ஞானிகள் - என்ன காரணம் தெரியுமா?

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் மார்க் டெய்சியர், விர்ஜின் மீடியா O2 உடன் இணைந்து, ஸ்கின்கேஸ் என்ற தொலைபேசி உறையை உருவாக்கியுள்ளார்.இந்த போன் கவர் சூரிய ஒளியில், அதிக யூவி கதிர்கள் வெளிப்படும் போது நிறம் மாற்... மேலும் பார்க்க

Jaipur: 'தினமும் 12 மணி நேரம் படிப்பு; பேத்தியின் உத்வேகம்' - CA தேர்வில் வென்ற 71 வயது முதியவர்!

பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால்... மேலும் பார்க்க

சென்னை: "என்னாச்சு? நீங்க ஓகேதான?" - டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?

சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னையை... மேலும் பார்க்க

Gingee Fort: செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ; சுவாரஸ்ய பின்னணி என்ன?

சத்ரபதி சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரா முழுவதும் கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் இன்றைக்கும் சுற்றுலா மையங்களாகவும், சத்ரபதி சிவாஜியின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.இந்நிலையில் மகார... மேலும் பார்க்க

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற... மேலும் பார்க்க