செய்திகள் :

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள் கவனத்திற்கு...

post image

இணையதளப் பக்கங்களில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பல்வேறு வகைகளில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் உணவுப் பொருள்கள் விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் பிளிங்கிட் செயலி வாயிலாக வாடிக்கையாளர் ஒருவர் 600 கிராம் திராட்சை வாங்கியுள்ளார்.

பிளிங்கிட் ஊழியரால் விநியோகிக்கப்பட்டபோது அதன் எடை 370 கிராமாக மட்டுமே இருந்துள்ளது. இது குறித்து புகைப்பட ஆதாரத்துடன் வாடிக்கையாளர் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

நவீன உலகில் கால வேகத்துக்கு ஏற்ப ஓட வேண்டியுள்ளதால், பலரும் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவதற்கு கூட நேரமின்றி அத்தியாவசியப் பொருள்கள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றை இணையதளப் பக்கங்களில் வாங்குகின்றனர்.

அவற்றை, விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ, ஸ்விக்கி, பிளிங்கிட், ஸெப்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கு கொண்டு சேர்க்கின்றன.

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற மின்னணு பொருள்களை இணையதளத்தில் விற்பனை செய்துவரும் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் பார்சல்களில் போலியான பொருள்கள் இருப்பதை பல்வேறு வாடிக்கையாளர்களின் புகார்களில் நாம் அறிந்துள்ளோம்.

உதாரணமாக ஸ்மார்ட்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டிகள், ஏன்? செங்கற்கள் கூட இருந்துள்ளன.

ஆனால், உணவுப் பொருள் விநியோகம் செய்து வரும் நிறுவனங்களின் சேவையிலும் கூட குளறுபடிகள், ஏமாற்று வேலைகள் நடக்கின்றன என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவே உள்ளது.

ஆர்டர் செய்த சைவ உணவில், கறித் துண்டு இருந்தது, ஐஸ்கிரீமில் பல்லி வால் இருந்தது என பல்வேறு புகார்கள் வாடிக்கையாளர்கள் எழுப்பியுள்ளனர்.

தற்போது காய்கறி, பழங்கள் போன்றவற்றை இணையத்தில் வாங்குவோரும் அதனை ஒரு முறைக்கு இரு முறை ஆய்வு செய்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிளிங்கிட் நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் 600 கிராம் திராட்சை வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு 370 கிராம் எடையளவு கொண்ட திராட்சை மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. அதுவும் திராட்சை அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட்டி உள்பட அந்த எடை இருந்துள்ளது.

குறைந்த எடையுடைய திராட்சை

இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், கண்மூடித்தனமாக பிளிங்கிட்டை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோன்று முறைகேடு நடப்பது இது முதல்முறை அல்ல என்றும், இதற்கு முன்பு அரை கிலோ வாங்கியிருந்தபோது அதில் 395 கிராம் மட்டுமே இருந்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.

அவசியத் தேவை இருந்தால் மட்டுமே இதுபோன்ற செயலிகளை உபயோகிக்க வேண்டும் என்றும் அல்லது வாங்குவோர் அதனை ஒவ்வொரு முறையும் பரிசோதனை செய்து வாங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | நாட்டின் ஏற்றுமதியில் மீண்டும் சரிவு! ரூ. 12 ஆயிரம் கோடி இழப்பு!

பிரதமா் மோடியுடன் துளசி கப்பாா்ட் சந்திப்பு

புது தில்லி: பிரதமா் மோடியை அமெரிக்க உளவுத் துறை தலைவா் துளசி கப்பாா்ட் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பின்போது கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபா் டிரம்ப், துளசி கப்பாா்ட் உ... மேலும் பார்க்க

ஸ்மார்போன் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை!

நடப்பு நிதியாண்டின் கடந்த 11 மாதங்களில் நாட்டின் ஸ்மார்போன் ஏற்றுமதி ரூ. 21.29 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மின்னணு மற்றும் தொழில் நுட்பத் துறை ... மேலும் பார்க்க

வெறுப்பதற்காக அல்ல மொழி; பல மொழி கற்பது அவசியம்: சந்திரபாபு நாயுடு

வாழ்வாதாரத்திற்காக முடிந்தவரை பல மொழிகளைக் கற்பது மிகவும் அவசியமானது என்றும் மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல எனவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழி கற்பதற்கு ஆதரவாக அம்ம... மேலும் பார்க்க

பணத்தைத் திருப்பிக்கொடு! மோசடியாளரையே ஏமாற்றிக் கதறவிட்ட இளைஞர்!!

சிபிஐ அதிகாரி என்று கூறி ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயன்ற நபரையே ஏமாற்றி, ரூ.10,000 பறித்த கான்பூர் இளைஞர் பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.கான்பூரைச் சேர்ந்த பூபேந்திர சிங் என்ற இளைஞருக்கு, சிபிஐ அத... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது: மத்திய அமைச்சர்

சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங... மேலும் பார்க்க

வாக்காளர் குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க மறுப்பு! எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் செய்த குளறுபடி, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிந... மேலும் பார்க்க