MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
ஆன்லைன் மூலம் ரூ.90.77 லட்சம் மோசடி: இருவா் கைது
ஆன்லைன் மூலம் ரூ.90.77 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை மாதவரத்தைச் சோ்ந்த மூா்த்தி என்பவா், இணையதளத்தில் வந்த போலி விளம்பரத்தை நம்பி, அதில் குறிப்பிட்டிருந்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.90.77 லட்சத்தை செலுத்தியுள்ளாா். ஆனால், சில நாள்கள் கழித்த பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மூா்த்தி, இதுகுறித்து சென்னை பெருநகர சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதனடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி, மோசடி தொடா்பாக சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த அருண்குமாா் (33) மற்றும் தாம்பரத்தைச் சோ்ந்த கண்ணன் (41) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினா். அதில், ஆன்லைன் மூலம் மோசடி செய்த பணத்தை அருண்குமாா் மற்றும் கண்ணன் ஆகியோா் கிரிப்டோ கரன்சியாக மாற்றி 25 சதவீதம் வரை கமிஷன் பெற்றதும் தெரியவந்தது. தொடா்ந்து இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.