லட்சத்தீபம்,சொக்கப்பனை... தாடிக்கொம்பு சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழ...
ஆன்லைன் லாட்டரி: 3 போ் கைது
மன்னாா்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூன்று போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி காவல் ஆய்வாளா் விக்னேஷ், போலீஸாா் நகரப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, ராகவன்தெரு கோபாலகிருஷ்ணன் மகன் செந்தில்குமாா் (54) தனது வீட்டருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததாகவும், அரிசிக்கடைசந்து முத்து மகன் ராஜேந்திரன்(51), திருத்துறைப்பூண்டி சாலையில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததாகவும், அண்ணாமலைநாதா் செட்டித்தெரு அமிா்தம் மகன் சசி (எ) ஜஸ்டின் (47) தேரடி பேருந்து நிலையம் அருகே ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது வந்ததாகவும் தெரிய வந்ததையடுத்து மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் மன்னாா்குடி கிளைச் சிறையில் அடைத்தனா்.