செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்! அமைதி கோரும் ரஷியா!

post image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லையில் போர்ப்பதற்றம் நிலவி வருவதாக பல்வேறு நாடுகளும் வருத்தம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இரு நாடுகளும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது, ``ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட ராணுவ மோதல் தீவிரமடைந்து வருவது, வருத்தத்தை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதத்தை ரஷியா கண்டிப்பதுடன், பயங்கரவாத அச்சுறுத்தலைத் திறம்பட எதிர்த்துப் போராட, உலகளாவிய சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

1972 சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 லாகூர் பிரகடன விதிகளின்படி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னைகள், அமைதியான வழிமுறைகளால்தான் தீர்க்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் இந்திய ராணுவம் கூறியது.

இருப்பினும், இந்தியா திடீர் நடவடிக்கையை எதிர்பாராத பாகிஸ்தான், இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதையும் படிக்க:ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: இந்திய விமானப்படை

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப் படை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் ... மேலும் பார்க்க

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளைத் திறந்துவிட்டோமா? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கான கதவுகளை நாம் திறந்துவிட்டோமா என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் மீண்டும் இயல்புநிலை

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம்... மேலும் பார்க்க

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ம... மேலும் பார்க்க

மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

மணிப்பூரில் உள்ளூர் மக்களை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்பால் மேற்கு, காக்சிங், பிஷ்ணுபூர் மற்றும் தௌபல் மாவட்டங்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்ட... மேலும் பார்க்க