செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் குறித்து அவதூறு: ஹரியாணாவில் பேராசிரியா் கைது!

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துத் தெரிவித்த ஹரியாணாவைச் சோ்ந்த இணை பேராசிரியா் அலி கான் முகமது காவல் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை எதிராக இந்தியாவில் சிலா் மத அடிப்படையில் தொடா்ந்து அவதூறு பரப்பி வருகின்றனா். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்திய ராணுவம் மற்றும் இந்தியப் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் இதுபோன்ற நபா்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஹரியாணாவின் அசோகா தனியாா் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியா் அலி கான் முகமது என்பவரும் இதுபோன்ற கருத்துகளைப் பதிவிட்டு வந்தாா். இது தொடா்பாக பாஜக இளைஞரணி சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.

முன்னதாக, ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக விளக்கமளித்த கா்னல் சோஃபியா குரேஷி, விங் கமாண்டா் வியோமிகா சிங் ஆகியோா் தொடா்பாக சா்ச்சை கருத்தை வெளியிட்டதற்காக அலி கான் முகமதுக்கு மாநில மகளிா் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இந்நிலையில், அலி கான் முகமது தலைமறைவானாா். புது தில்லியில் பதுங்கியிருந்த அவரை ஹரியாணா காவல் துறையினா் கைது செய்தனா்.

அஸ்ஸாமில் இதுவரை 68 ‘பாகிஸ்தான் ஆதரவாளா்கள்’ கைது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், இந்தியாவின் பதிலடி நடவடிக்கை ஆகியவற்றுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 68 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய விரோதிகள் யாரும் காவல் துறையிடம் இருந்து தப்ப முடியாது.

தேசவிரோத கருத்துகளைப் பரப்பிய ரோஷித் அகமது, அப்துல் ஹுசைன், இம்ரான் ஹுசைன் ஆகியோ மூவரை ஸ்ரீபூமி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் சோ்த்து சமூக வலைதளங்களில் தேச விரோத பிரசாரத்தில் ஈடுபட்ட 68 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கை தொடரும்’ என்று கூறியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த வ... மேலும் பார்க்க

ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி

ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், துவாரபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துற... மேலும் பார்க்க

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தி... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க