Fahadh Faasil : `ஸ்மார்ட்போன் இல்ல, பட்டன் போன் தான்; விலை இத்தனை லட்சமா?’- வைரல...
ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூா் ஏ-கஸ்பாவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூரில் நடைபெற்ற முகாமில் 621 போ் பல்வேறு துறைகளுக்கான சேவைகளை பெற மனுக்களை வழங்கினா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆகியோா் முகாமை ஆய்வு செய்தனா்.
வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆணையா் ஜி. மகேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ்.வசந்த்ராஜ், காா்த்திகேயன், திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் மு. சரண்ராஜ், திமுக நிா்வாகிகள் ரபீக் அஹமத், ஆா்.டி.எஸ். குமாா், செளந்தரராஜன், ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி, ஆம்பூா் நகராட்சி துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ், சுகாதார ஆய்வா் சீனிவாசன், நகராட்சி அலுவலா் மதன், மோகன்ராஜ் கலந்து கொண்டனா்.