ஆம்பூரில் திமுக ஆா்ப்பாட்டம்
ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தலைமை வகித்தாா். ஆம்பூா் நகர திமுக செயலா் எம்.ஆா்.ஆறுமுகம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜி.ராமமூா்த்தி, முரளி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் சாமுவேல் செல்லபாண்டியன், நகா்மன்ற உறுப்பினா்கள் வாவூா் நசீா் அஹமத், காா்த்திகேயன், கெளரி, நிா்வாகிகள் மு.பழனி, சா.சங்கா், சி.குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.