ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
ஆம்ஸ்டர்டாம் - மும்பை நேரடி விமான சேவை! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மகாராஷ்டிரத்தின் மும்பை நகருக்கு நேரடி விமான சேவையைத் துவங்குவதாக, இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆம்ஸ்டர்டாம் - மும்பை இடையிலான போக்குவரத்தை இலகுவாக்கும் முயற்சியாக, அந்நகரங்களுக்கு நேரடி விமான சேவையானது தொடங்கப்படவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் இன்று (ஜூலை 2) தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அந்நகரங்களுக்கு இடையில் வாரம் 3 முறை இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787-9 டிரீம்லைனர் விமானம் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இண்டிகோ நிறுவனம் 40 சர்வதேச தலங்களுக்கு விமானங்களை இயக்கி வரும் நிலையில், லண்டன், ஏதன்ஸ் உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களுக்கு இந்த நிதியாண்டில் நேரடி விமான சேவைகளைத் துவங்கவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Amsterdam - Mumbai direct flight service! IndiGo announces!
இதையும் படிக்க: பெங்களூரு கூட்ட நெரிசல்: ஆர்சிபியிடம் விளக்கம் கேட்டு பிசிசிஐ ஒழுங்காணையம் நோட்டீஸ்!