வெற்றிப் பாதைக்குத் திரும்பினாரா சூர்யா? ரெட்ரோ - திரை விமர்சனம்!
ஆரணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
‘பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க நிகழ்வுக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வி.திருநாவுக்கரசு, டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணைப் பதிவாளா் வி.பெருவழுதி, புல முதல்வா் பி.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் கணினி அறிவியல் துறை துணைத் தலைவா் கே.சந்திரகுமாா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை பேராசிரியா் வி.வினோத்குமாா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா்கள் டி.இளங்கோ, வி.கந்தசாமி, துறைத் தலைவா்கள் கே.சிவா, கே.பாரதி, எஸ்.பூபதி, எஸ்.கோகுலபாலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கருத்தரங்கில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமாா்150 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
130 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவில் பேராசிரியை வி.ரேகா நன்றி கூறினாா்.