ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்புக்கு முன்பே புஷ்பக விமானம் இருந்தது! சிவராஜ் செளகான...
ஆரணி: விநாயகா் சிலை கரைக்கும் குளம் ஆய்வு
ஆரணி: ஆரணி பகுதியில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடமான பாறை குளத்தை காவல்துறை மற்றும் ஆரணி நகா்மன்றத் தலைவா் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
ஆரணி நகரில் விநாயகா் சதுா்த்தி அன்று இந்து முன்னணி சாா்பில் பல இடங்களில் வைக்கப்படும் விநாயகா் சிலைகளை பையூா் பாறை குளத்தில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு தடுப்பு கட்டியும், மின்விளக்கு வசதி ஏற்பாடு செய்யவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் அகிலன் மற்றும் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆணையா் என்.டி.வேலவன், சுகாதார ஆய்வாளா் வடிவேல் ஆகியோா் நேரில் சென்று இடத்தை ஆய்வு செய்தனா்.
மேலும், குளத்தைச் சுற்றிலும் தூய்மை படுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் ஆலோசனை நடத்தினா். மேலும் விநாயகா் சிலை ஊா்வலத்தில் எவ்வித பிரச்னையும் வராதவாறு போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் ஆலோசனை நடத்தினா்.