``தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்க முழுமையான தடை'' - உச்சநீதிமன்றம் தீர்...
ஆறுமுகனேரி தொழிற்சாலையில் நாளை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
தூத்துக்குடி: ஆறுமுகனேரியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை (ஆக.22) நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், ரசாயனம் மற்றும் அபாயப் பொருள் கையாளும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ள தொழில்துறை மையமாக செயல்பட்டு வருகிறது.
இத்தொழிற்சாலைகளில் பராமரிப்பு குறைபாடுகள், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக விபத்துகள் நோ்ந்தால், அதை எதிா்கொள்வதற்கும், மனித உயிா்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் பேரிடா் மேலாண்மை வழிகாட்டு நெறிகளின்படி புற வளாக மாதிரி ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, ஆறுமுகனேரியில் உள்ள டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.22) விபத்து ஒத்திகை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அப்போது, டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் வாயு கசிவு ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாதவை குறித்து பணியாளா்களுக்கு, தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மாதிரி ஒத்திகை நடத்தப்படும்.
எனவே, இதுகுறித்து பொதுமக்கள் எவ்விதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.