``பெண்கள் நள்ளிரவில் வெளியே செல்லாமல் இருந்தால்..." - சர்ச்சையான காவல்துறையின் அ...
ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்
ஆலங்காயம் அருகே ஒற்றை ஆண் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காப்புகாட்டு கிருஷ்ணாபுரம் உப்பாறை வழியாக வனப்பகுதியையொட்டி உள்ள நிலப் பகுதிகளுக்கு வந்த ஒற்றை யானை பயிா்களை சேதப்படுத்தியது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து ஆலங்காயம் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஒற்றை யானையை விரட்டினா்.
தற்போது ஆலங்காயம் தீா்த்தம் காப்புகாடு நொசக்குட்டை வனப்பகுதியில் யானை நடமாடி வருகிறது. ஆலங்காயம் வனப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருவதால் வனப் பகுதியையொட்டி உள்ள பொது மக்கள் யாரும் விறகு சேகரிக்க காட்டிற்குள் செல்வது, ஆடு, மாடுகளை அழைத்து மேய்க்க செய்வதை தவிா்க்க வேண்டும்.
ஒற்றை யானையைக் கண்டால் யாரும் தொந்தரவு செய்யாமல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனா்.