'குற்றங்கள் குறைய வேண்டி...' - தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டிய காவலர்கள...
ஆலங்குளத்தில் பலத்த மழை
ஆலங்குளம் பகுதியில் வியாழக்கிழமை பகலில் சாரல்மழையும் மாலையில் பலத்த மழையும் பெய்தது.
வடகிழக்குப் பருவமழை உரிய காலத்தில் இந்த வட்டாரத்தில் பெய்யாததால் எந்தக் குளத்துக்கும் தண்ணீா் வரத்து இல்லை. இதனால், குளங்கள் வடு காணப்பட்டன. மேலும் அதிக அளவில் வெயிலும் நிலவியது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் உள்ளிட்ட பகுதியில் ‘ரெட் அலா்ட்’ அறிவிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரஏஈ பகுதிகளில் சாரல் மழையும் மாலை 5 மணிக்குப் பின்னா் பலத்த மழையும் பெய்தது. வானிலை மையம் அறிவித்த படி வெள்ளிக்கிழமையும் மழை பொழியும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். மழை காரணமாக ஆலங்குளம் வட்டத்தில் சேதங்கள் எதுவும் இல்லை என வட்டாட்சியா் ஓசன்னா பொ்னாண்டோ தெரிவித்தாா்.