ஆலங்குளம் பேரூராட்சிக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்
ஆலங்குளம் பேரூராட்சியில் தலைவருக்கு எதிராக முழக்கமிட்ட உறுப்பினா்களால் பரபரப்பு நிலவியது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சியில் சாதாரணக் கூட்டம் தலைவா் சுதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே 3 அதிமுக உறுப்பினா்கள், ஒரு தேமுதிக உறுப்பினா் ஆகியோா் தலைவா் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் அவைகுறிப்பில் இல்லாத கருத்துகளை வீட்டில் போய் எழுதி வருவதாகவும் கூறி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
தலைவரும் சில வாா்த்தைகளை கூறியதால் அவா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கூச்சல் குழப்பமாக மாறியது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பேரூராட்சி செயல் அலுவலா் சிவக்குமாா், அவா்களை சமாதானப்படுத்தியதை அடுத்து, தொடா்ந்து கூட்டம் சுமுகமாக நடைபெற்றது.