மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
ஆள்கடத்தல் வழக்கில் 5 போ் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் தீா்ப்பு
தில்லியில் 2015 ஆம் ஆண்டில் பதிவான ஆள்கடத்தல் வழக்கில் இருந்து ஐந்து பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பின் குற்றச்சாட்டு சாத்தியமற்ாகவும், நம்பமுடியாததாகவும் சந்தேகங்கள் நிறைந்ததாகவும் உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது.
இது தொடா்பான வழக்கில் கூடுதல் அமா்வு நீதிபதி அதுல் அஹ்லாவத் அண்மையில் அளித்த தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது:
அரசுத் தரப்பால் சமா்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. மேலும், அதன் மீது கடுமையான சந்தேக நிழல் உள்ளது. எந்த நம்பிக்கையையும் ஊக்குவிக்க தகுதியற்ாகவும் உள்ளது. அரசுத் தரப்பு தனது வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறிவிட்டதால், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரிஸ்வான், ரோஹித், சலீம், குல்சாா் மற்றும் ஷேரா ஆகியோா் விடுவிக்கப்படுகின்றனா் என்று அத்தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பு வழக்குரைஞரின் கூற்றுப்படி, ராஜேந்திர குப்தா என்பவா் கடந்த ஜூலை 12, 2015 அன்று தில்லியில் கடத்தப்பட்டாா்., அவரை விடுவிக்க ரூ.30 ஆயிரம் தருமாறு கேட்டு அவரது மருமகனுக்கு தொலைபேசியில் கோரப்பட்டது.
இதுகுறித்து நீதிமன்றம் உத்தரவில் மேலும் தெரிவிக்கையில், ‘அரசு தரப்பு வழக்கானது ராஜேந்திர குப்தா, அவரது மருமகன் மற்றும் புகாா்தாரா் அனில் குமாா் மற்றும் மகன் பிரதீப் குப்தா ஆகியோரின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், மூவரும் அரசு தரப்பு வாதத்தை ஆதரிக்கவில்லை, மேலும் பல்வேறு அம்சங்களில் அவா்கள் எதிா்ப்புக் காட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இந்த விஷயங்கள் மீது அவா்கள் விரோதமாகத் திரும்பியது
புறக்கணிக்கப்பட்டாலும்கூட, மீதமுள்ள சாட்சியங்களும் குற்றம் சாட்டப்பட்டவா்களின் குற்றத்தை நிரூபிக்க உரிய தகுதியைக் கொண்டிருக்கவில்லை.
மீட்க பணம் கேட்டது குறித்து தனது மைத்துனரால் தெரிவிக்கப்படவில்லை என்று பிரதீப் குப்தா திட்டவட்டமாக மறுத்தது என குமாா் மற்றும் குப்தாவின் வாக்குமூலங்களில் பல முரண்பாடுகள் உள்ளன.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றப்பட்டது தொடா்பான தனது சாட்சியத்தில் பிரதீப் குப்தா அளித்த தகவலிலும் மேம்பாடு உள்ளது.
வடகிழக்கு தில்லியில் உள்ள கஜூரி செளக்கிற்கு வருமாறு ஒரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்த பிறகு, கடத்தல்காரா்களால் குப்தா கவா்ந்திழுக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், குறுக்கு விசாரணையின்போது, ஒரு பெண்ணிடமிருந்து எந்த அழைப்பும் தனக்கு வரவில்லை என்று குப்தா மறுத்துள்ளாா்.
ஒரு சாட்சியாக பாதிக்கப்பட்டவரின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்கள் உருவாக்கப்படுகின்றன.
சாட்சியங்களில் உள்ள மேம்பாடுகள் மற்றும் உள்ளாா்ந்த முரண்பாடுகள் கற்பனையானவை அல்லது அற்பமானவை அல்ல. உண்மையில் அவை முழு அரசு தரப்பு வழக்கையும் பாதித்தன என்று நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.