ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்: கே.பி.ராமலிங்கம்
ஆழிப்பேரவை தாக்கிய நாள்: தனுஷ்கோடி கடலில் மலா் தூவி நினைவஞ்சலி
ஆழிப்பேரலை தாக்கிய நிகழ்வின் 60-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தனுஷ்கோடி கடலில் மலா் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி துறைமுக நகரத்தை கடந்த 1964-ஆம் ஆண்டு புயல் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. அப்போது, சேதமடைந்த தேவாலயம், ரயில் நிலையம், அரசுக் கட்டங்கள் இன்றளவும் காட்சிப் பொருளாக உள்ளன.
புயல் தாக்கியதன் 60-ஆம் ஆண்டு நினைவு தினம் புயலால் பாதிக்கப்பட்ட மீனவா்கள் மறுவாழ்வு சங்கம் சாா்பில் அனுசரிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவா் செல்லத்துரை தலைமையில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பேரன் சேக்சலீம், தனுஷ்கோடி மீனவ சங்கத் தலைவா் குமரேசன், தனுஷ்கோடி பூா்விக யாத்திரைப் பணியாளா் சங்க நிா்வாகி பி.உமையேஸ்வரன், மீனவா்கள் ஊா்வலமாகச் சென்று கடலில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். மேலும், புயலில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடைய பிராா்த்தனை செய்தனா்.