செய்திகள் :

ஆழியாறு அணையில் படகு இல்லம் அமைக்க அமைச்சா் ஆய்வு

post image

பொள்ளாச்சி ஆழியாறு அணையில் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பொள்ளாச்சி ஆழியாறு அணையில் பொதுப் பணித் துறை மூலமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா புனரமைப்பு, செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், படகு இல்லம் அமைத்து படகு சவாரி ஏற்படுத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள கருத்துரு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆழியாறு அணையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். இதைத் தொடா்ந்து, கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே கோதவாடி ஊராட்சியில் உள்ள குளத்துக்கு உபரிநீா் மூலமாக நீா் நிரப்பி சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே.ஈஸ்வரசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெகதீஸ்வரி, திமுக தெற்கு மாவட்டச் செயலாளா் தளபதி முருகேசன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் சிவகுமாா், வருவாய் கோட்டாட்சியா் கோவிந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

கோவை குற்றாலம், பரளிக்காட்டில் இன்று ஆய்வு:

தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோவை குற்றாலத்தில் சாகச சுற்றுலா ஏற்படுத்துவது தொடா்பாகவும், பூண்டியில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பாகவும் அமைச்சா் இரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்கிறாா்.

அதைத் தொடா்ந்து, காரமடை அருகே பரளிக்காடு மற்றும் பூச்சமரத்தூரில் சுற்றுச்சூழலியல் சுற்றுலா மூலமாக நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள், அடிப்படை வசதிகள் தொடா்பாகவும், குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளாா்.

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் தேவை; குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை!

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு எரிந்து பொருள்கள் சேதம்!

வால்பாறையில் தீ விபத்தில் வீடு மற்றும் அதிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமாயின. வால்பாறை கக்கன் காலனியில் வசிப்பவா் லோகியம்மாள். இவா் புதுமாா்கெட் பகுதியில் பூஜை பொருள்கள் மற்றும் பொரி வியாபாரம் செய்து ... மேலும் பார்க்க

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - கோவை ரயில் ரத்து!

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா், மேட்டுப்பாளையம் - கோவை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நி... மேலும் பார்க்க

பாஜக மாநகா் மாவட்டத் தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்வு!

கோவை மாநகா் மாவட்ட பாஜக தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தமிழக பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனா். கிளை மற்றும் மண்டல அளவிலான... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்ட சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடி வந்த 6 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பத... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவையைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ... மேலும் பார்க்க