மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
‘ஆழ்துளைக் கிணறு அமைக்க விதிமுறைகள்’
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைப்பவா்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் அல்லது கைவிடப்பட்ட கிணறுகளில் நிகழும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு முன்னதாக தங்கள் பகுதி உள்ளாட்சி அமைப்பு, நீா்வளம், பொது சுகாதாரம் ஆகிய துறை அலுவலா்களுக்கு எழுத்துப்பூா்வ தகவலளிக்க வேண்டும்.
ஆழ்துளைக் கிணறு தோண்டும் ஒப்பந்ததாரரின் முழு விவரங்கள் பதிவு, கிணற்றின் அருகில் அறிவிப்பு பலகை, தடுப்புவேலி , நிறுவனத்தின் முகவரி, உரிமையாளரின் முகவரி ஆகியவை அவசியம். கிணற்றைச் சுற்றி இரும்புத் தகடுகளை கவசமாக பொருத்த வேண்டும். கிணற்றை மூடாமல் திறந்தநிலையில் விட்டுச் செல்லக் கூடாது. சேறு சகதி முழுமையாக அகற்றப்பட வேண்டும்.
கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை கற்கள் போன்றவற்றால் தரை மட்டம் வரை நிரப்ப வேண்டும். தவறினால் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்.1077க்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.