காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் தீா்த்தவாரி
ஆரணி: பெரணமல்லூா் அருகேயுள்ள ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தையொட்டி திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
பழைமை வாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில்
கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரமோற்சவ விழா தொடங்கியது.
தொடா்ந்து தினமும் இரவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் உலா நடைபெற்றது. தொடா்ந்து 17-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமிநரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.
பின்னா் உற்சமூா்த்திகளுடன் தீா்த்தவாரி மண்டபத்தில் சக்கரத்தாழ்வாா் எழுந்தருளினாா்.
அப்போது, பக்தி முழக்கத்துடன் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும், இரவு பிரமோற்வச கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறையினா் மற்றும் அறங்காவலா் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.