செய்திகள் :

`ஆவினில் வேலை' பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்

post image

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக சாத்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி ரவீந்திரன் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

ராஜேந்திரபாலாஜி

அதன் அடிப்படையில் அ.தி.மு.க. நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதே நாளில் விஜய் நல்லதம்பி அளித்த புகாரில் சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்குப் பலரிடம் பணம் பெற்றதாகவும், ராஜேந்திரபாலாஜிக்கு ரூ.3 கோடி கொடுத்ததாகவும் கூறி ராஜேந்திரபாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை 18 நாட்களுக்கு பின், கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் வைத்து தமிழக போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ராஜேந்திர பாலாஜிராஜேந்திர பாலாஜி

ஆனால் முன்னாள் அமைச்சர் மீதான மேல் விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்காததால் வழக்கு நிலுவையில் இருந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி, ரவீந்திரன் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழக்கு விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி ராஜேந்திர பாலாஜி மீது, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார்.

ராஜேந்திர பாலாஜி

பின்னர், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஶ்ரீவில்லிபுத்தூரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வரும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2-ல் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது இரு வேறு வழக்குகளிலும் ஆன்லைன் மூலம் 16.04.25 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் முன்பு ஆஜராகினர்.

ராஜேந்திர பாலாஜி

வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணை அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டார். இரு வேறு வழக்குகளிலும் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையின் 150 பக்கம் கொண்ட நகல் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ் தாக்கரே வீட்டுக்கு சென்ற உத்தவ்; `இனி எடுபடாது' -பட்னாவிஸ் விமர்சனம்

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு, பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2005-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரப்போட்டியின் காரணமாக, சிவசேனாவில் இருந்து விலகிய... மேலும் பார்க்க

தோல்வியில் முடிந்த தாக்கரே சகோதரர்களின் முதல் கூட்டணி தேர்தல்: முதல்வரைச் சந்தித்த ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் கடந்த 2023ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பா.ஜ.கவோடு கூட்டணி அமைத்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தொடர்ந்து காங்கிரஸ் கூட்ட... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை பா.ஜ.க தேர்வு செய்ய காரணம் என்ன?

துணை ஜனாதிபதி தேர்தல் துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அப்பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய பா.ஜ.க தலைமை கூட்டத்தில், துணை ஜனாதிப... மேலும் பார்க்க

``சென்னை மாநகராட்சி முழுதும் திமுக போலி வாக்காளர்களால் மட்டுமே வெற்றி பெறுகிறது'' -எடப்பாடி பழனிசாமி

வாக்காளர் பட்டியல் திருத்தம்‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளில் மக்களை சந்தித்தார். ... மேலும் பார்க்க

``கட்சியை கலைத்து விட்டு திமுகவில் இணைந்து விடலாம்'' - கம்யூனிஸ்ட் கட்சி மீது எடப்பாடி விமர்சனம்

அதிமுகவின் சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கின்ற பிரச்சார பயணத்தில் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில்... மேலும் பார்க்க