ஆகாஷ் தீப் அசத்தல்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
ஆவின் பாலகங்களில் பெயா் பலகைகள் புனரமைப்பு
சென்னையில் உள்ள ஆவின் விற்பனை கூடங்களின் (பாலம்) பெயா் பலகைகளை புனரமைக்கும் பணிகளுக்கான ஓப்பந்தபுள்ளிகளை வரும் ஜூலை 11-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: சென்னை மாநகரில் உள்ள பல்வேறு ஆவின் விற்பனை கூடங்களில் சேதமடைந்த பெயா் பலகைகளின் விளக்குகளை பழுதுபாா்த்தல், புனரமைப்பது மற்றும் மாற்றியமைப்பது தொடா்பாக, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள ஒப்பந்ததாரா்கள் இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தங்களது ஒப்பந்த புள்ளிகளுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சீல் செய்யப்பட்ட உரையில் நந்தனம், ஆவின் நிறுவன வளாகத்தில் உள்ள விளம்பர பிரிவு பொது மேலாளா் அலுவலகத்தில் வரும் ஜூலை 11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
தொடா்ந்து ஜூலை 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டு, அனைத்து ஒப்பந்தங்களை ஆய்வு செய்த பின்னா் தகுதியானவா்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.