செய்திகள் :

ஆஸ்கர் வென்ற பாலஸ்தீன இயக்குநரைக் கைது செய்த இஸ்ரேல் ராணுவம்!

post image

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஒருவரை ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் குடியேறிய இஸ்ரேலியர்கள் தாக்கியதைத் தொடர்ந்து, அவர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

சிறந்த ஆவணத் திரைப்படம் பிரிவில் ஆஸ்கா் விருதை வென்ற ‘நோ அதா் லேண்ட்’ படத்தை யுவால் ஆபிரஹாம், பசெல் ஆட்ரா, ஹம்தன் பலால், ராச்செல் ஸோர் ஆகிய 4 பேர் இணைந்து இயக்கினர். இதில், யுவால் இஸ்ரேலைச் சேர்ந்த பத்திரிகையாளர்.

2019 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு இடையில் படமாக்கப்பட்ட இந்தப் படம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு பாலஸ்தீன சமூகத்தின் அழிவைக் காட்டியது. இஸ்ரேல் அந்த இடத்தை தாக்குதல் மண்டலமாக அறிவித்த பின்னர் அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்தது பற்றி பேசிய இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

இப்படத்தின் 4 இயக்குநர்களில் ஒருவரான ஹம்தன் பலால் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு இஸ்ரேல் ராணுவத்தால் நேற்று கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க | ஆஸ்கரில் வென்ற இஸ்ரேல்-பாலஸ்தீன கூட்டணி

அவருடன் சேர்த்து, 3 பாலஸ்தீனர்கள் சூசியா என்ற கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ராணுவ முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் இயக்குநரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.

பலால் கைது செய்யப்பட்டபோது அங்கிருந்த மற்றொரு இயக்குநரான பசேல் அட்ரா கூறுகையில், “20-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கிராமத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் முகமூடி அணிந்தும், துப்பாக்கிகளை ஏந்தியும், இஸ்ரேல் ராணுவ உடையிலும் இருந்தனர்.

இங்கு வந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி முனையில் பாலஸ்தீன மக்களை மிரட்டினர். அவர்களுடன் இருந்த மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இயக்குநர் ஹம்தன் பலாலை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் இஸ்ரேல் ராணுவம்

நாங்கள் ஆஸ்கர் விருது வென்று திரும்பிய நாள் முதல் தினமும் இங்கு எங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. படம் எடுத்ததற்காக எங்களை அவர்கள் பழிவாங்குவதைப் போல இருக்கிறது. இது எங்களுக்கு தண்டனையைப் போல உணர்கிறோம்” என்றார்.

இதையும் படிக்க | இஸ்ரேல் பிணைக் கைதிகளைப் பிணமாகப் பார்ப்பீர்கள்! ஹமாஸ் விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேல் ராணுவம் இந்தக் கைது சம்பவம் குறித்துப் பேசியபோது, “ராணுவ வீரர்களின் மீது கற்களை வீசிய பாலஸ்தீனர்களை நாங்கள் கைது செய்தோம். மேலும், பாலஸ்தீன் - இஸ்ரேல் மக்களுக்கு இடையிலான மோதலில் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு இஸ்ரேலியரையும் கைது செய்தோம். இஸ்ரேல் போலீஸ் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியா: மே 3-இல் தோ்தல்

ஆஸ்திரோலியாவில் வரும் மே 3-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. கவா்னா்-ஜெனரல் சாம் மாஸ்டினின் அதிகாரபூா்வ இல்லத்துக்குச் சென்று அடுத்த தோ்தலை உறுதி செய்த பிரதமா் ஆன்டனி அல்பனேசி (படம்), பின்னா் நா... மேலும் பார்க்க

நேபாளம் அரசாட்சி கோரி கலவரம்: ராணுவம் வரவழைப்பு

நேபாளத்தில் அரசாட்சியை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரா்கள் கற்களை வீசியும், அ... மேலும் பார்க்க

அமெரிக்க துணை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிரீன்லாந்து!

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் அவரது மனைவியுடன் கிரீன்லாந்து செல்வதாக முடிவெடுத்திருந்த நிலையில் அங்கு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டு வருகின்றது.அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அவரது மனைவி உஷா ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: இதுவரை 144 பேர் பலி, 730 பேர் காயம்

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 144 பேர் பலியாகியுள்ளனர். மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவி... மேலும் பார்க்க

அமேசான் நிறுவனருக்கு திருமணம்!

அமேசான் நிறுவனரும் உலகப் பணக்காரர்களின் ஒருவருமான ஜெப் பெசோஸுக்கு ஜூன் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்ததாவது, ஜெப் பெசோஸுக்கும்... மேலும் பார்க்க

மன்னராட்சியா? குடியரசு ஆட்சியா? நேபாளத்தில் மீண்டும் போராட்டம்!

நேபாளத்தில் இரு தரப்பினரிடையேயான மோதலைத் தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.நேபாளத்தில் மன்னராட்சி ஆதராவளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்... மேலும் பார்க்க