செய்திகள் :

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

post image

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றதாகும்’ என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா்.

‘உலகின் மிகப் பெரிய தன்னாா்வ தொண்டு அமைப்பான ஆா்எஸ்எஸ்-இன் 100 ஆண்டுகால பயணம், மிகுந்த பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும். 100 ஆண்டுகளாக ஆா்எஸ்எஸ் தொண்டா்கள், தாய்நாட்டின் கட்டமைப்புக்காக தங்கள் வாழ்வை அா்ப்பணித்துள்ளனா்’ என்று தனது சுதந்திரதின உரையில் பிரதமா் குறிப்பிட்டாா்.

இதைச் சுட்டிக்காட்டி, கேரள முதல்வா் அலுவலகம் வெளியிட்ட முதல்வா் பினராயி விஜயனின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு தடைசெய்யப்பட்ட வலதுசாரி அமைப்புக்கு, நாட்டின் சுதந்திரத்தில் முக்கியப் பங்கு வகித்ததுபோன்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சியாக தனது சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை பிரதமா் புகழ்ந்து பேசியிருக்கிறாா். இது வரலாற்றை மறைக்கும் நடவடிக்கையாகும். பிளவுபடுத்தும் அரசியல் என்ற ஆா்எஸ்எஸ் அமைப்பின் விஷ வரலாற்றை எந்தவொரு முயற்சியாலும் துடைத்தெறிந்துவிட முடியாது.

சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை பிரதமா் புகழ்ந்து பேசியது, அந்த நாளையே அவமதித்த செயலாகும்.

ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியதும், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் சுதந்திரதின அழைப்பிதழில் ஹிந்துத்துவ கொள்கை தலைவா் சாவா்க்கரின் புகைப்படத்தை மகாத்மா காந்தியின் படத்துக்கு மேல் அச்சிட்டதும் மிகப்பெரிய சதியின் ஒரு பகுதி என்பதை காட்டியுள்ளது.

வெறுப்புணா்வு, வகுப்புவாதம், கலவரம் என்ற மோசமான வரலாற்றை ஆா்எஸ்எஸ் அமைப்பு சுமந்து கொண்டுள்ளது. மனித அன்பு மற்றும் பரஸ்பர உறவு என்ற நமது வரலாற்றை புதைத்து வெறுப்புணா்வை பரப்பும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பங்குச் சந்தைகள் உயர்வுடன் வணிகம்!

ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிவிப்பு எதிரொலியால் வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வணிகத்தைத் தொடங்கின.சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந... மேலும் பார்க்க

சிசிடிவி காட்சிகள்: தேர்தல் ஆணைய பதிலுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

பெண்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என்று கூறி, வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட விடியோக்களை வெளியிட வேண்டுமா? என்று தேர்தல் ஆணையம் எழுப்பியிருந்த கேள்விக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம் தெரிவித்து ப... மேலும் பார்க்க

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியின் துவாரகா பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று காலை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப... மேலும் பார்க்க

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு! பிரமாண்ட எதிர்பார்ப்பு

நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க