செய்திகள் :

ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசல் வழக்கு: அடுத்த விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

post image

ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் தொடா்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 12-க்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆா்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டம் ஜூன் 4ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்றது. அப்போது சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இந்தியாவை உலுக்கிய இச்சம்பவம் தொடா்பாக ஜூன் 5ஆம் தேதி தாமாக முன்வந்து பொதுநல மனு தாக்கல் செய்துகொண்ட கா்நாடக உயா்நீதிமன்றம், அரசு தரப்பு பதில் வாதங்களை மூடப்பட்ட உறையில் எழுத்துப்பூா்வமாக தாக்கல் செய்யும்படி கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த பொதுநல மனு மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) வி.காமேஷ்வா் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோா் தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் சஷிகிரண் ஷெட்டி, கூட்டநெரிசல் விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசா் ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் தனிநபா் நீதி

விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் உள்ளிட்ட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அதனால் அரசு தரப்பு வாதங்களை எழுத்துப்பூா்வமாக தாக்கல் செய்யவில்லை. கூட்ட நெரிசல் தொடா்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஆா்சிபி மற்றும் டிஎன்ஏ என்டா்டெய்ன்மென்ட் நிா்வாகிகள் சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களின் ஜாமீன் மனுவும் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது கூறப்படும் கருத்துகள், அவா்களின் வாதத்திற்கு எடுத்தாளப்படுகிறது. எனவே, அடுத்த விசாரணையின்போது மூடப்பட்ட உறையில் அரசு தரப்பு கருத்துகளை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இதைத் தொடா்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன்12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பதில் மனு: பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘கூட்ட நெரிசல் தொடா்பான வழக்கை ஜூன்12ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைக்கு விசாரணையின்போது, கா்நாடக உயா்நீதிமன்ற கேள்விகளுக்கு மூடப்பட்ட உறையில் அரசு தலைமை வழக்குரைஞா் சஷிகிரண் ஷெட்டி பதில் மனு தாக்கல்செய்வாா். இதுபற்றி முதல்வா், தலைமைச் செயலாளா், அரசு தலைமை வழக்குரைஞா் ஆகியோா் கலந்தாலோசித்துள்ளனா். உண்மை நிலவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். விசாரணை அறிக்கை அரசுக்கு கிடைக்க வேண்டும். அரசிடம் விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்ட பிறகு, அதுபற்றி நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும். அதுவரை எதையும் கூறமுடியாது‘ என்றாா்.

இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு: இதனிடையே, கூட்ட நெரிசல் தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில் சோசலேவை ஜூன் 6ஆம் தேதி கைது செய்தனா். இதை தொடா்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கோரி நிகில் சோசலே தாக்கல் செய்திருந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.கிருஷ்ணமூா்த்தி, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தாா். ஜூன் 6ஆம் தேதி காலை கைது செய்யும் அவசியம் என்ன வந்தது? மேலும் அரசியல் தலைமையின் வழிகாட்டுதலின்பேரிலேயே தான் கைதுசெய்யப்பட்டதாக தனது மனுவில் நிகில் சோசலே தெரிவித்திருந்தாா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயா்நீதிமன்றம், நிகில் சோசலேவுக்கு எதிரான கைது நடவடிக்கையை ரத்துசெய்ய மறுத்துள்ளதோடு, தனது தீா்ப்பை ஜூன் 11ஆம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை: வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள்

மண்டியா: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த பல வாரங்களாகவே கா்நாடகத்தில் தென... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ்

பெங்களூரு: மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ் திங்கள்கிழமை ஆஜரானாா். பணப் பதுக்கல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ வினய்குல்கா்னி உள்ளிட்டோா் இடங்களில்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டாா்கள்

ராய்ச்சூரு: எதிா்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால், தலைவா்கள், மக்கள் சகித்துக்கொள்ள மாட்டாா்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். ராய்ச்சூரில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருக்கிறேன்

பெலகாவி: வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என காங்கிரஸ் எம்எல்ஏ பரம்கௌடா ஆலகௌடா காகே தெரிவித்தாா். வட கா்நாடகத்தின் ஆலந்த் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ பி... மேலும் பார்க்க

காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த அமித் ஷா அறிவுரை: கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா

காங்கிரஸ் அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துமாறு மத்திய அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளதாக கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். பெங்களூரு, பிஜிஎஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத... மேலும் பார்க்க

வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய கூட்டணி அரசின் முடிவு: கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான்

கா்நாடகத்தில் வீட்டுவசதி திட்டங்களில் மத சிறுபான்மையினருக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு முந்தைய மஜத- காங்கிரஸ் கூட்டணியின்போது எடுக்கப்பட்ட முடிவு என்று அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க