செய்திகள் :

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; முகமது ஷமி அணியில் சேர்ப்பு!

post image

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.

இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்துகிறார். துணைக் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கடந்த 14 மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அணிக்குத் திரும்பியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்சித் ராணா இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி விவரம்

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதீஷ் குமார் ரெட்டி, அக்‌ஷர் படேல் (துணைக் கேப்டன்), ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரெல்.

ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய ஜாண்டி ரோட்ஸ்!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஆதரவாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாண்டி ரோட்ஸ் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் ட... மேலும் பார்க்க

ஆஸி. அணிக்காக 100 ஓவர்கள் வீசவும் தயார்: நாதன் லயன்

ஒவ்வொரு வாரமும் 100 ஓவர்கள் வீசவும் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் ஆஸி.யை வீழ்த்துவது மிகவும் கடினம்: இங்கிலாந்து கேப்டன்

ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து மகளிரணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்ட... மேலும் பார்க்க

கௌதம் கம்பீர் - பிசிசிஐ அதிகாரிகள் கூட்டம்: மூத்த வீரர்கள் எதிர்காலம் குறித்து ஆலோசனையா?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் - இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இடையேயான கூட்டம் இன்று (ஜனவரி 11) நடைபெறவுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் முடிந்துவிட்டது... ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.வங்கதேச அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த தமிம் இக்பால், அந்த அணிக்காக அனைத்து வடி... மேலும் பார்க்க