செய்திகள் :

இசையால் விழாக்கோலம் பூண்ட திருவையாறு... தியாகராஜ ஆராதனை; பஞ்சரத்தின கீர்த்தனை பாடி இசையஞ்சலி!

post image

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் வட கரையில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இசை மேதை ஸ்ரீ சத்குரு தியாகராஜர் சமாதி அமைந்துள்ளது. அந்த இடத்தில் கோயில் எழுப்பி ஸ்ரீ சத்குரு தியாகராஜர் சிலை அமைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. தினமும் தியாகராஜர் கோயிலுக்கு பலர் வருகை தந்து வணங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக இசை கலைஞர்கள், இசை ஆர்வமுள்ளவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு செல்கின்றனர்.

பஞ்சரத்தின கீர்த்தனை பாடும் இசை கலைஞர்கள்

இந்நிலையில், தியாகராஜர் மறைந்த தினம் ஆராதனை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் ஏராளமான இசைகலைஞர்கள் அவரது சமாதியில் அமர்ந்து பஞ்சரத்தின கீர்த்தனை பாடி ஸ்ரீ ஸ்ரீ சத்குரு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி, தியாகராஜரின் 178 -வது ஆராதனை விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் இசை கருவிகள் மூலம் இசை அமைத்து பாடல் பாடி சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

இதனால் திருவையாறு விழாக்கோலம் கண்டது. விழாவின் முக்கிய நிழ்வான இன்று அதிகாலை, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி வாழ்ந்த இல்லத்திலிருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, வீதியுலாவாக அவரது சன்னதிக்கு வந்தனர். பிறகு, நாதஸ்வரம் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்தின கீர்த்தனை தொடங்கியது.

தியாகராஜர்

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி, அருண் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வந்திருந்த கர்நாடக சங்கீத கலைஞர்கள் என ஆயிரக்கணக்கனோர், நாட்டை ராகத்தில் அமைந்த பாடலில் தொடங்கி ஆரபி ராகம், வராளி ராகம், ஸ்ரீராகம் என பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி, இசைக் கருவிகளை இசைத்து ஸ்ரீ சத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, மூலவர் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

மஹரசங்கராந்தி : தஞ்சாவூர் பெரிய கோயில் நந்திக்கு 2,000 கிலோ காய், கனி, இனிப்புகளில் அலங்காரம்

உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் பெங்கல் விழாவான நேற்று மாலை, மகாநந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏர... மேலும் பார்க்க

``சபரிமலை ஐயப்பனின் திருவபரண அலங்காரத்தை பெண்களும் தரிசிக்கலாம்" பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்!

சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மகரவிளக்கு அன்று திருவாபரணங்கள் சாற்றி பூஜைகள் நடப்பது நமக்குத் தெரியும். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சாற்றப்படும் அதே திருவாபரணங்கள் பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு சாற்றி வழிபடும... மேலும் பார்க்க

பொங்கல் தரிசனம்: `காசி முதல் திருக்கழுக்குன்றம் வரை'- அபூர்வ பலன்களை அருளும் சூரிய தலங்கள்

சூரிய பகவான், சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்ற திருத்தலங்கள் ஏராளம். அவற்றுள் முதன்மையானது காசி. இங்கு, 12 திருநாமங்களுடன் 12 இடங்களில் எழுந்தருளி உள்ளார் சூரியன். இந்த பன்னிரண்டு ஆதித்தியர் (சூரியன்)க... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு! - கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்! - Album

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு.! கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மக்கள்.! மேலும் பார்க்க

மனம் விரும்பும் புண்ணிய ஸ்தலங்கள் - என் புத்தாண்டு அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க