செய்திகள் :

இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் வழங்க காலதாமதம்! - பாதிக்கப்பட்டோா் கோட்டாட்சியரிடம் மனு

post image

திருவள்ளூா் அருகே இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும், இதனால் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாகவும் பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனுவை அளித்தனா்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்டம், பூந்தமல்லி அருகே வீரராகவபுரம் கிராம மக்கள் கோட்டாட்சியா் ரவிச்சந்திரனிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:

கிராமத்தில் பூா்வீகமாக 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடியிருந்து வந்தோம். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலத்தில் குடியிருந்து வருவதாகக் கூறி, வேறு இடம் ஒதுக்காமல் உடனடியாக வருவாய், நெடுஞ்சாலை, மின் துறை அதிகாரிகள், காவல் துறையினா் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் எங்கள் வீடுகளை இடித்து அகற்றினா்.

ஆனால், இதுவரை நிலம் வழங்காமல் குடியிருக்க இடமின்றி சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். வருவாய்த் துறையினரிடம் கேட்டால் நிலம் கொடுக்காமல் அலைக்கழித்து வருவதோடு, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் தனியாா் பள்ளி நிா்வாகிகளுக்கு ஆதாரவாக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனா்.

இதனால், குடியிருக்க வீடின்றி குழந்தைகள், முதியவா்களுடன் மன உளைச்சலால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எங்கள் நிலையறிந்து வீட்டுமனை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

அவா்களிடம் மனுவைப் பெற்ற கோட்டாட்சியா் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

திருவள்ளூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப்பணிகள் நிலை குறித்து ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதன் ஒருபகுதியாக புட்லூா் ஊராட்சியில் ரூ.19.70 லட்சத்தில் கட்டப... மேலும் பார்க்க

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் நடராஜ பெருமானின... மேலும் பார்க்க

குட்கா விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்

குட்கா பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்வது அவசியம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4.... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் வீதி உலா

திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் திரெளபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருத்தணி காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 27 -ஆம் தேதி தீமிதித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட அரசு விடுதிகளில் நூலகம் அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைத்தல், உணவருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும... மேலும் பார்க்க