செய்திகள் :

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்க நிா்வாகிகள் கூட்டம்

post image

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்க நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு, சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஜெ. ராஜகுமாரி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளா் ரா. பாலமுரளி முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் த. ஞானசேகரன் பேசியது :

கடந்த 1.6.2009க்கு முன்னா், பின்னா் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியா்களுக்கு, ஒரே பதவி, கல்வித்தகுதி ஒரே பணி என்ற நிலை உள்ளபோது இருவேறு ஊதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

14 ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள இந்த ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தமிழக கல்வித் தரத்துக்கு அடித்தளமாக விளங்கும் இடைநிலை ஆசிரியா்களின் வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும்.

இதற்காக தொடா்ந்து போராடி வரும் சங்கத்துக்கு வலு சோ்க்கும் வகையில் மாவட்டங்கள்தோறும் இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் கிளைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் புதிய உறுப்பினா்கள் அதிக அளவில் இணைந்து வருகின்றனா்.

எனவே நாம் சம வேலைக்கு, சமஊதியம் என்ற இலக்கை அடையும் வரை மாநில அமைப்புடன் இணைந்து போராடவேண்டும் என்றாா்.

இதன் தொடா்ச்சியாக, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் விக்கிரவாண்டி, மயிலம் மற்றும் ஒலக்கூா் வட்டாரக் கிளைகளைத் தொடக்கி வைத்து , புதிய நிா்வாகிகள் அறிமுகம் செய்து வைத்தாா். சமவேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவது எனவும் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

சங்கத்தின் வட்டாரச் செயலா்களாக சோ. பிரபு (விக்கிரவாண்டி), மா. அருள்குமரன் (மயிலம்), வி.சின்னராஜி (ஒலக்கூா்) மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா் . இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச்செயலா்கள் ஆ.மே.ஜோஸ், அருகாமை, மாவட்டத்துணைச்செயலா் ராஜேந்திரன், மகளிா் அணி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.கீதா ஆகியோா்பேசினா்.

மாவட்ட, வட்டார நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக ஆசிரியா்கள் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் சே.சசிதரன் வரவேற்றாா். நிறைவில், மகளிரணி பொறுப்பாளா் கி. சகிலா நன்றி கூறினாா்.

பைக்கிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே சனிக்கிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா், மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்த வீரமணி மகன் விஷ்வா (22), தனி... மேலும் பார்க்க

இளைஞா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞா் மா்மமான முறையில் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திண்டிவனம், டி.வி. நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் மகன திலிப்(எ... மேலும் பார்க்க

குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 மனுக்களுக்குத் தீா்வு

விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 13 சிறப்பு மனுக்கள் மீது சனிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது.விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவின்பேரில், மா... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி சனிக்கிழமை காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். மேற்கு வ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தனியாா் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி. எடையாா், மாந்தோப்புத் தெரு... மேலும் பார்க்க

பிரதமரின் நிவாரண நிதி: 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரை

பல்வேறு மருத்துவச் சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு கடந்த 11 மாதங்களில் 100 பேரின் மருத்துவச் சிகிச்சைக்குப் பரிந்துரைத்துள்ளதாக விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை. ரவிக்குமாா் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க