336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இணையவழியில் மோசடி: முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.38 லட்சம் திருட்டு
முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக ரூ.6.38 லட்சம் திருடப்பட்டுள்ளது.
திருப்பூா், திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் (83). இவருடைய கைப்பேசி வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கடந்த 4 நாள்களுக்கு முன்னா் ஒரு லிங்க் வந்துள்ளது. ராஜகோபாலனும் அந்த லிங்க்குக்குள் சென்றுள்ளாா். ஆனால், அதைப் பயன்படுத்தத் தெரியாமல் அதிலிருந்து வெளியேறியுள்ளாா்.
இந்நிலையில் ராஜகோபாலன் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய பணம் அனுப்பியுள்ளாா். அப்போது அவருடைய வங்கிக் கணக்கில் போதிய அளவில் பணம் இல்லை என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத்தொடா்ந்து அவா் வங்கிக்குச் சென்று பாா்த்தபோது அவரது கைப்பேசியில் வாட்ஸ்ஆப்பில் லிங்க் வந்த தேதியிலிருந்து 27 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.6.38 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் ராஜகோபாலன் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.