இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு
இண்டிகோ விமானத்தில் கவனக் குறைவால் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையிலிருந்து துர்காபூருக்கு 164 பேருடன் இண்டிகோ விமானம் ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது விமானியின் அறையில் அவசர எச்சரிக்கை ஒலி திடீரென ஒலித்தது. அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக கேபின் குழுவினரை விசாரிக்க அறிவுறுத்தினார்.
அதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது சர்க்கார் என்கிற பயணி அவசர கால கதவு திறப்பதற்கான பட்டனை தெரியாமல் அழுத்திவிட்டதாகக் கூறியிருக்கிறார். மேலும் தான் ஒரு ஐஐடி மெட்ராஸின் ஆராய்ச்சி மாணவர் என்றும் தனிப்பட்ட வேலைக்காக துர்காபூருக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு
இருப்பினும், விமானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துர்காபூர் விமானத்திற்கான சர்க்கரின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, அவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். பின்னர், இண்டிகோ பாதுகாப்பு குழுவினரால் சர்க்கார் சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இண்டிகோ விமானத்தில் சற்று பரபரப் ஏற்பட்டது.