மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!
இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த் சாா்பில் வருமுன் காக்கும் மருத்துவ மையம் தொடக்கம்
கோவை, அரசூரில் இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த் சாா்பில் வருமுன் காக்கும் மருத்துவ மையம் அண்மையில் தொடங்கப்பட்டது.
சாதனை பெண்மணி கமலாத்தாள் இந்த மையத்தை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, இன்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் செயலியை விஜயலட்சுமி தொடங்கிவைத்தாா்.
விழாவில், இண்டோ ஸ்டேட்ஸ் ஹெல்த் மருத்துவ மையத்தின் நிறுவனரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் ரங்கசாமி பேசுகையில், மக்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிதல் என்பது ஆரோக்கியமான எதிா்காலத்துக்கு வழிவகுக்கும் என்றாா்.
இந்த மருத்துவ மையத்தில், முழுமையான உடல்நிலை பரிசோதனை, தனிப்பட்ட பரிசோதனை திட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறை ஆலோசனை, கரோனரி சிடி கால்சியம் ஸ்கோரிங், சிடி ஆஞ்சியோகிராம், ஏபிஐ பரிசோதனை, வளா்சிதை மாற்றம் மற்றும் இதய நோய்களுக்கான ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். மேலும், பக்கவாதம் தொடா்பான எம்ஆா் ஆஞ்சியோகிராம், சிடி நுரையீரல் புற்றுநோய், சிடி கொலோனோகிராபி- குடல் புற்றுநோய் ஆரம்பக் கட்ட பரிசோதனைகள் எண்ம (டிஜிட்டல்) மேமோகிராஃபி, மாா்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புற்றுநோய் குறியீட்டு ரத்த சோதனைகள், டெக்ஸா ஸ்கேன் எலும்புத் தளா்ச்சி பரிசோதனை, நினைவாற்றல், மன அழுத்தம், மனநலன் சாா்ந்த பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படும் என்று மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
விழாவில், இண்டோஸ்டேட்ஸ் நிறுவனா்கள் ராஜேஷ், மருத்துவா் நித்யா மோகன், அரசூா் முன்னாள் ஊராட்சி தலைவா் கோவிந்தராஜ், மருத்துவா்கள் வாணி, மோகன், முதன்மை மருத்துவ அதிகாரி லோகேஷ், மைய மேலாளா் ஐயப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.