செய்திகள் :

"இதனால்தான் லாராவின் சாதனையை முறியடிக்கவில்லை" - 367* ரன்களில் டிக்ளேர் செய்தது பற்றி வியான் முல்டர்

post image

தென்னாப்பிரிக்க அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் கேஷவ் மஹாராஜ் தலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 328 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.

அதைத்தொடர்ந்து, வியான் முல்டர் தலைமையில் நேற்று இரண்டாவது டெஸ்டில் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா.

முதல்நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 465 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா. கேப்டன் வியான் முல்டர் 264 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றுகொண்டிருந்தார்.

வியான் முல்டர்
வியான் முல்டர்

இன்று தொடங்கிய இரண்டாம் நாளில் மதிய உணவு இடைவேளைக்கு முன் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் குவித்தது.

முல்டர் முச்சதம் கடந்து 334 பந்துகளில் 49 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 367 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

மதிய உணவு இடைவேளை முடிந்து இன்னிங்ஸ் தொடங்கியதும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற லாராவின் சாதனையை முல்டர் எளிதாக முறியடிப்பர் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் முல்டர். எல்லோருக்கும் இது சற்று அதிர்ச்சியைக் கொடுத்தது என்பது மிகையல்ல

பின்னர், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே 170 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது.

அதனால், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 51 ரன்கள் குவித்தது.

ஆட்ட நேர முடிவுக்குப் பிறகு 400 ரன் சாதனையை எளிதில் முறியடிக்கும் வாய்ப்பு இருந்தும் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஏன் என்பது குறித்து பேசிய முல்டர், "முதலில், எங்கள் அணிக்கு அந்த ரன் போதுமானதாக இருந்தது. எனவே, நாங்கள் பந்து வீச வேண்டும் என்று நினைத்தேன்.

இரண்டாவது, பிரையன் லாரா ஒரு ஜாம்பவான். அத்தகைய அந்தஸ்திலுள்ள ஒருவர், இந்தச் சாதனையைத் தக்கவைக்கத் தகுதியானவர்.

இதேபோன்று மீண்டும் எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால், அப்போதும் இதையேதான் செய்வேன்.

டிக்ளேர் செய்வது பற்றி சுக்ரி கான்ராட்டிடம் (தென்னாப்பிரிக்கா தலைமைப் பயிற்சியாளர்) பேசினேன், அவரும் இதைத்தான் உணர்ந்தார். எனவே, ஜாம்பவான் லாரா இதைத் தக்கவைக்கத் தகுதியானவர்" என்று கூறியிருக்கிறார்.

Yash Dayal: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றினாரா யஷ் தயாள்? BNS பிரிவு 69-ன் கீழ் வழக்கு பதிவு

ஆர்சிபி (RCB) அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் யஷ் தயாள் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக உத்தரப்பிரதேச இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் புகாரளித்திருந்தார்.போலீஸ் இதனைக் கண்டுகொள்ளாததால் ... மேலும் பார்க்க

`விடாத சோகங்கள்; தோனியின் இளம்படை இன்ஸ்பிரேஷன்; கண்டெடுத்த RCB' - ஆகாஷ் தீப்-உம் ஆட்ட நாயகன் தான்!

ஆகாஷ் தீப்... இது வெறும் பெயர் மட்டுமல்ல, பீகாரில் இந்திய அணியின் ஒரு புதிய நம்பிக்கை.இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளில் கோலி, ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர் இல்லாமல் முதல்முறையாக இங்கிலாந்தில் களமிறங்கியி... மேலும் பார்க்க

367 நாட் அவுட்... வாய்ப்பிருந்தும் லாரா சாதனையை முறியடிக்காமல் விட்ட தன்னலமற்ற தென்னாப்பிரிக்க வீரர்

இன்றைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டன.2019 வரை டெஸ்டில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை என யாரேனும் ஒருவர் முச்சதம் அடித்துக்கொண்டிருந்தார்.கடை... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: `19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் புது வரலாறு' - வைபவ் சூர்யவன்ஷி சாதனை

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சதமடித்து, ஐ.பி.எல்லில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்த நிலையில், தற்போது 19 வயதுக்குப்பட்டோருக்கான போட்டியில் அதிவேகம... மேலும் பார்க்க

ENG vs IND: "அச்சமின்றி இங்கிலாந்தை நெருக்கிய இந்தியா" - கேப்டன் கில்லை வாழ்த்திய விராட் கோலி

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற இளம் இந்திய அணியை மனதார வாழ்த்தியுள்ளார் விராட் கோலி. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தை வென்று சாதனை படைத... மேலும் பார்க்க

முதல் முறையாக TNPL கோப்பையை வென்ற திருப்பூர் - அஷ்வினின் திண்டுக்கல் அணியை வென்றது எப்படி?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டின்என்பில் இறுதி போட்டி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. திண்டுக்கல் அணி சொந்த ஊரில் விளையாவதால் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்போடும், திருப்பூர் தமிழன்ஸ்... மேலும் பார்க்க