செய்திகள் :

இதற்காக சிறைக்குச் செல்லவும் தயார்: மம்தா பானர்ஜி பேச்சு!

post image

வேலையிழந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பேசுவதால், தன்னை சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 25,000 ஆசிரியர்​களை நியமனம் செய்​த​தில் முறை​கேடு​கள் நடந்ததாக எழுந்த புகாரில் 25,000 ஆசிரியர்களின் பணி நியமனத்தைத் ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

பணியிடங்களுக்கு அதிகமாக நியமனங்கள், வெற்று ஓஎம்ஆர் ஷீட்டுக்கு மதிப்பெண்கள் அளித்து பணி நியமனம் என முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது.

இதனை எதிர்த்து மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 3 அன்று உறுதி செய்துள்ளது.

இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக, காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதாகவும் முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேலும் அவர் கூறியபடி கொல்கத்தாவின் நேதாஜி ஸ்டேடியத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் இன்று பேசினார்.

"நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்று நினைத்துவிடாதீர்கள். எங்களுக்கு கல் மனம் இல்லை. பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதால் என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை.

தகுதியுள்ளவர்கள் வேலையில்லாமல் இருக்கக் கூடாது அவர்களது பணியில் இடைவெளி விழக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நியாயமற்றது.

இந்த விவகாரத்தில் எந்த சம்பந்தமும் இல்லாத என்னை இணைத்துப் பேசுகின்றனர். எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று பேசினார்.

இந்த விவகாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக பாஜகவினர் இன்று பேரணி நடத்துவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

7 நோயாளிகள் உயிரிழப்பு விவகாரம்: போலி இருதய மருத்துவர் கைது!

போபால்: போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 நோயாளிகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டாக்டர் நரேந்திர ஜான் கேம் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்த... மேலும் பார்க்க

மணிப்பூரில் பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு: ஊரடங்கு அமல்!

வக்ஃப் விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறையால் மணிப்பூரில் லிலோங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(... மேலும் பார்க்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர்: பிரிட்டனுடன் பொருளாதார பேச்சுவார்த்தை!

புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் லண்டன் செல்கிறார். இதற்காக அவர் திங்கள்கிழமை(ஏப... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் வக்ஃப் சட்ட திருத்த விவகாரம் குறித்த விவாதத்தின்போது, தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!

பிகார் மாநிலத்தில், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிக்கூண்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதிலிருந்த கடிகாரம் நின்றுபோன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.பிகார் ஷ... மேலும் பார்க்க

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க