செய்திகள் :

இதுவரை ஏன் எதிர்க்கவில்லை? - நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

post image

கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உள் விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள் என நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தில்லியில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தின்போது எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது, மேலும் அவரது வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் உள் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. விசாரணையில் நீதிபதி வீட்டில் பணம் இருந்தது உறுதியானது. இதனிடையே நீதிபதி பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில் பதவி நீக்கத்துக்கு எதிராக இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாசி, 'பதவி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றால் உள் விசாரணை குழு மேற்கொண்ட விசாரணையில் நீங்கள் ஏன் ஆஜரானீர்கள்? இப்போது அதை எதிர்ப்பது ஏன்? விசாரணை அறிக்கை எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அதுவரை ஏன் எதிர்க்கவில்லை? விசாரணை குறித்தும் தீ விபத்து, பணம் கைப்பற்றப்பட்டது குறித்தும் நீங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை' என்று கூறினர்.

முன்னதாக நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், 'அரசியலமைப்பின் 124-வது பிரிவின்படி மட்டுமே ஒரு நீதிபதியை நீக்க முடியும். ஒரு உள் விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நீக்க முடியாது' என்று வாதிட்டார்.

எனினும் நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பு தங்கள் பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Supreme Court asks Justice Yashwant Varma, Why did you appear before in-house Committee if it was unconstitutional?

ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சம் சுற்றுலாவாசிகள் பயணம்

புது தில்லி: நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, ஜம்மு-காஷ்மீருக்கு 95 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்களும், 19,570 வெளிநாட்டவரும் சுற்றுலா சென்றுள்ளனா்.கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பக... மேலும் பார்க்க

பொறுமையை சோதிக்க வேண்டாம்! ம.பி. அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புது தில்லி: ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சா்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ‘எங்கள் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் கைதான கன்னியாஸ்திரீகளை விடுவிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்

புது தில்லி: சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.மேலும், பா... மேலும் பார்க்க

சட்டவிரோத இணையவழி சூதாட்ட வழக்கு: அமலாக்கத் துறை முன் கூகுள் அதிகாரிகள் ஆஜா்

புது தில்லி: சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், கூகுள் நிறுவன அதிகாரிகள் அமலாக்கத் துறையின்முன் ஆஜராகி விளக்கம் அளித்தனா். சட்டவிர... மேலும் பார்க்க

பஹல்காம், ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலுக்கு அமித் ஷாவே பொறுப்பு: காங்கிரஸ்

புது தில்லி: ‘பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவே பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது; எனவே, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநரை கைகாட்டிவிட்டு ஒளிந்துகொள்ளாமல் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவே இதற்... மேலும் பார்க்க

ஐஐடி கரக்பூரில் மாணவா்கள் தற்கொலை செய்வது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

புது தில்லி: மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில் மாணவா்கள் தற்கொலை செய்வது ஏன்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.மேலும், ஐஐடி கரக்பூா் மற்றும் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஷார... மேலும் பார்க்க